×

விராலிமலை கிளை நூலகத்தில் ஆரி வேலைப்பாடுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

விராலிமலை, ஆக.23: விராலிமலை கிளை நூலகத்தில் ஆரி வேலைப்பாடுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கு வரும் 31ம் தேதிக்குள் விருப்பமுள்ளவர்கள் கிளை நூலகத்தை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நூலகர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆரி வேலைப்பாடுகள் கொண்ட உடைகளை விரும்புபவர்கள் பலர். விதவிதமான டிசைன்களில், பார்த்தவுடன் பிடித்து விடும் வகையில் உருவாக்கப்படும் ஆரி வேலைப்பாடு ஆடைகளில், நிறங்கள் முதல் கற்கள், நூல்வரை நுணுக்கமான வேலைப்பாடுகள் அதிகமாக இருக்கும். ஆரி வொர்க் செய்யப்பட்ட ஆடைகள் என்பது பல வருடங்களாகவே டிரெண்டிங்கில் இருக்கக்கூடியது என்றாலும், தற்போது பலராலும் விரும்பி அணியப்படுகிறது. ஆரி வொர்க்கில் பல வகை உண்டு.

அதில் பெரும்பாலோனோரின் விருப்பம், மகம் ஒர்க், ஸ்டோன் ஒர்க், பாசி ஒர்க் போன்றவை. ஆரி வேலைகளை பொருத்தவரை குடும்பத்தலைவிகள் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே இதை செய்வதால் தற்போது இத்தொழில் மீது பெண்களுக்கு கவனம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து கிளை நூலகத்தை மேம்படுத்தும் நோக்கிலும், வீட்டில் இருந்தபடியே பெண்கள் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளும் நோக்கத்தில் விராலிமலை கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கிளை நூலகத்தில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பெண்கள் கிளை நூலகத்தை தொடர்பு கொண்டு வரும் 31ம் தேதிக்குள் முன் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post விராலிமலை கிளை நூலகத்தில் ஆரி வேலைப்பாடுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Viralimalai Branch Library ,Viralimalai ,Ari ,Viralimalayan Branch Library ,Dinakaran ,
× RELATED விராலிமலை சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை